வேதாரண்யம், ஆக.4: நாகப்பட்டினம் வேதாரண்யம் தாலுகாதலைஞாயிறு ஒன்றியம் ஆயமூர்ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர், தலைஞாயிறு ஒன்றிய திமுக செயலாளர் மகாகுமார் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திருக்குவளை வட்டாட்சியர் சுதர்சனம், தனி வட்டாட்சியர் முருகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, சிங்காரவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள், வடுகூர் தனலட்சுமி , ஆயமூர் சாந்தி, திருவிடைமருதூர் தாமரைச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் மகேந்திரன், மற்றும் அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். முகாமில் ஒரு சில மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உடனே ஆணை வழங்கப்பட்டது.