வேதாரண்யம், ஜூன் 7: வேதாரண்யம் தாலுகாஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை எதிர்ப்புமன்றம் சார்பாக போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வைத்தியதன் நிகழ்சிக்கு தலைமை வகித்துபோதை எதிர்ப்பு உறுதிமொழியினை வாசிக்க ஆசிரியர்கள் கோமதி, குணவதி, புனிதா, சசி, சரண்யா மற்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் இதனால் வாய் புற்று நோய் மற்றும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மாணவர்களுக்கு வாய்மேடுசப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.