திருவனந்தபுரம்: ஆபாச வீடியோவை காண்பித்து மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியாரை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சஜி தாமஸ் (43). கொச்சியில் உள்ள மார்த்தோமா சபைக்கு சொந்தமான ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார். இந்தநிலையில் சர்ச்சுக்கு வரும் இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக சஜி தாமஸ் மீது ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து 2 வருடங்களுக்கு முன்பு பாதிரியார் பொறுப்பில் இருந்து சஜி தாமஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே கொச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் அவருக்கு நெருக்கம் இருந்து வந்தது. பலமுறை இளம்பெண்ணை ஓட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது இளம்பெண்ணுக்கு தெரியாமலேயே சஜி தாமஸ் அவரது ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து இருந்தாராம். பின்னர் ஆபாச வீடியோக்களை காண்பித்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் எர்ணாகுளம் மத்திய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சஜி தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர்….