Sunday, April 21, 2024
Home » ஆன்லைனில் தொடர்பு கொண்டு புதுவையில் 15 பேரிடம் ₹49.50 லட்சம் மோசடி

ஆன்லைனில் தொடர்பு கொண்டு புதுவையில் 15 பேரிடம் ₹49.50 லட்சம் மோசடி

by Karthik Yash

புதுச்சேரி, மார்ச் 2: புதுவையில் 15 பேரை ஆன்லைனில் தொடர்பு கொண்டு ரூ.49.50 லட்சம் வரை மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் சமூக வலைதளம் வழியாக பண மோசடி சம்பவங்களில் மர்மநபர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே புதுச்சேரி நகர பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரை மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் முதலீடு செய்து வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி அவரும் பல பணபரிவர்த்தனையாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்து அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்துள்ளார்.அவர் சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்றபோது மேலும் பணம் செலுத்துமாறு மோசடி கும்பல் கூறவே ஏமாற்றமடைந்ததை உணர்ந்த அவர், புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசை நாடியுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல் புதுச்சேரியில் வசிக்கும் ரமேஷ்குமார் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி ரூ.17.74 லட்சத்தை மேற்கண்ட நபருக்கு ரமேஷ்குமார் கொடுத்துள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிநாட்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். இந்த மோசடி தொடர்பாக ரமேஷ்குமார் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார். மேலும் ஹரிராம் என்பவர் ஓஎல்எக்சில் ரூ.34 ஆயிரம் செலுத்தி ஒரு பொருளை மற்றொரு நபரிடம் இருந்து பெறுவதற்காக ஆர்டர் செய்துள்ளார். பணம் பெற்ற பிறகு அந்த நபர், பொருளை அனுப்பாமல் ஏமாற்றி உள்ளார். இதுதவிர காரைக்கால் திருநள்ளாறு, தோப்புத் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (52) என்பவரிடம் மொரீசியஸில் அகழ்வாராய்ச்சி ஆபரேட்டர் வேலை தருவதாக கூறி ஆன்லைனில் தொடர்பு கொண்ட நபர், ரூ.80 ஆயிரம் செயலாக்க கட்டணமாக பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். நேற்று ஒரே நாளில் 15 பேரிடம் ரூ.49.50 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ள நிலையில் இதுதொடர்பாக சைபர் க்ரைம் காவல்துறை புகாரை பெற்று விசாரித்து வருகிறது.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi