பல்லடம், ஜூன் 7: பல்லடத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சமூக வலைத்தளங்களை கண்காணித்த போது, பல்லடம் அருகே உள்ள பருவாயைச் சேர்ந்த பிரகாஷ் (41) என்பவர் ஆன்லைன் மூலம் சூதாடியதும், லாட்டரி எண்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் அவரை கைது செய்தனர்.