திருமலை: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை பகுதியில் நேற்று காலை 7.26 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் நேற்று மதியம் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவானது. …