திருத்துறைப்பூண்டி, மார்ச் 27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணிபுரிபவர் பிச்சையம்மாள் நாகராஜ். இவருடைய மருமகன் மாரிமுத்து (38). இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சலி ஏற்பட்டது. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாத கூறினர். இதனால் இறந்தவரின் கண்களை தானம் செய்ய மனைவி இளமதி, மகன்கள்அலெக்ஸ், இன்பா ஆகியோர் முடிவு செய்தனர். மனித நேயத்துடன் 4 பேருக்கு பார்வைகிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கண்கள் தானம் செய்யப்பட்டது. தூய்மை காவலரான பிச்சையம்மாள் குடும்பத்தினரை ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகர், சண்முகா கார்த்திக், தங்கமணி, ராஜா, தண்டபாணி, சக்திவேல், ஹரி கிருஷ்ணன், ஐயப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆதிரெங்கம் ஊராட்சியில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இறந்தவரின் கண்கள் தொடர்ந்து இதுபோன்று தானம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதிரெங்கம் ஊராட்சியில் மாரடைப்பால் உயிரிழந்த கூலித்தொழிலாளி கண்கள் தானம்
0