பாடாலூர், ஆக. 17: டி.களத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் சுதந்திரதின விழா நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவிற்கு பொறுப்பு ஆசிரியர் ராதா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சரஸ்வதி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்,
இதையடுத்து பள்ளி மாணவர்கள் காந்தி, நேரு, பாரதியார் போன்ற தேச தலைவர்கள் வேடமணிந்து தேசப்பற்றினை மழலைதமிழிலி வெளிப்படுத்தினர். மாணவ-மாணவிகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவி ராதிகா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.