குமாரபாளையம், ஜூலை 16: திமுக சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான ஆதார், ரேசன், பிறப்பு, இறப்பு, பட்டா, சிட்டா சான்றிதழ்கள் பதிவு செய்து தரப்படுகிறது. குமாரபாளையம், சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகம் கடந்த மாதம் 30ம்தேதி தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இங்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இ.சேவை மையமும் துவங்கப்பட்டுள்ளது. இச் இ.சேவை மையத்தில் பொதுமக்களுக்கு தேவையான ஆதார், ரேசன்கார்டு திருத்தம், பிறப்பு, இறப்பு பதிவு செய்து சான்றிதழ்கள் பெறுதல், பட்டா சிட்டா பதிவிறக்கம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. இங்கு பொதுமக்கள் அமர இருக்கை மின்விசிறி, குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் அனைத்தும் எளிதாக பெற்று பதிவிறக்கம் செய்து தருவதால் இந்த இ சேவை மையத்தில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.