கரூர், செப்.13:ஆதார் மற்றும் ஆதாருக்காக கொடுத்த ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று ஆதார் கண்காணிப்பு குழுவுடன் கலெக்டர் பிரபு சங்கர் நேற்று ஆய்வு நடத்தினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான ஆதார் கண்காணிப்புக் குழு மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதற்கட்டமாக, கரூர் மற்றும் புகளுர் வட்டங்களில் ஆதார் அட்டை பெற்றவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட முகவரிகள் மற்றும் அடையாளத்திற்கான ஆவணங்களின் விபரங்களை சேகரித்து உண்மைத்தன்மை குறித்து கணக்கிட்டு அதற்குரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், நேர்முக உதவியாளர் (பொ) தண்டாயுதபாணி, உதவி மேலாளர் (ஆதார்) தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சீதோஷ்ண நிலையில் மாற்றம்: வழக்கமாக செப்டம்பர் மாதத்தில், காற்றழுத்தம், மேலடுக்கு சுழற்சி போன்ற பல்வேறு காரணங்களால் தொடர்ந்து மழை பெய்யும், தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுதும் லேசான வெயிலும், இதமான நிலையும்தான் நிலவி வந்தது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த மாதத்தில் வெயிலின் தாக்கம் மே மாதத்திற்கு நிகராகவே உள்ளது. இதன் காரணமாக, வெயில் காலத்தில் பொதுமக்களுக்கு என்னென்ன தேவையோ அந்த வகையான பொருட்கள்தான் தற்போது அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அந்தளவுக்கு கரூர் மாவட்டத்தில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை முற்றிலும் மாற்றும் வகையில் செப்டம்பர் மாதம் முடிவடைவதற்குள் தேவையான அளவு மாவட்டம் மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.