ஊட்டி, ஆக. 20: ஊட்டி மர்க்கஸ் சார்பில் ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகே ஓல்டு போஸ்ட் ஆபீஸ் பகுதியில் ஊட்டி மார்க்கஸ் கல்லூரி உள்ளது. இங்கு மார்க்க கல்வி மற்றும் உடற்கல்வி ஆகியவை கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கும் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஊட்டி மர்க்கஸ் சார்பில் ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சையது முகம்மது ஷா தலைமை வகித்து 16 பேருக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாசர் ஹிஷாமி, உமர் அல்ஹசனி, லுக்மான் மதானி, நவ்வி அல்ஹசனி ஆலநல்லூர், முகமது நிஷாத் அல்ஹசனி, ஹாபில் யூசுப், சுகைல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.