காளையார்கோவில், நவ. 30: காளையார்கோவிலில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக மாநில இளைஞரனி செயலாளர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில், பேருந்து நிலையத்தில் கொடியேற்றினர். பின்னர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வைரபிரகஷ், பிரதிநிதி அருண்குமார் ஆகியோர் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு இனிப்புகள், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு வேட்டி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
ஆதரவற்றோர் காப்பகத்தில் திமுகவினர் அன்னதானம் வழங்கல்
0