ஜெயங்கொண்டம், ஜூலை 9: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் அட்மா திட்டத்தில் காரீப் பருவத்திற்கான கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு பயிற்சியானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ராமன் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ராதிகா தலைமை ஏற்று பேசுகையில் மண் பரிசோதனையின் அவசியம் மற்றும் பரிசோதனை எடுக்கும் முறைகள் குறித்தும், உழவன் செயலி பயன்பாடுகள், விதை நேர்த்தியின் அவசியம், பசுந்தாள் உரப்பயிர்கள் முக்கியத்துவம், அங்கக வேளாண்மை சாகுபடி, நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் பேசுகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும் மற்றும் வேளாண் திட்டங்கள் பற்றியும் விளக்கிப் பேசினார். முன்னதாக அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் வரவேற்று அட்மா திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் குமணன் செய்திருந்தார்.
ஆண்டிமடம் அருகே ராமன் கிராமத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழுவுக்கு பயிற்சி
38
previous post