ஆண்டிமடம்,நவ.19: ஆண்டிமடம், அய்யூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம் நடந்தது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் கூவத்தூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட அய்யூர் ஊராட்சியில் மண்டல இணை இயக்குநர் ஹமீது அலி மற்றும் உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குநர் ரமேஷ் ஆகியோரது அறிவுறுத்துதலின் பேரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை, மலட்டு தன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, சினை ஊசி ஆண்மை நீக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் 500 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, 500 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டன. சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் கால்நடை பராமரிப்பில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகளை அய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் வழங்கினார். முகாம் பணிகளை கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில், ஜெயபிரிதி, கால்நடை ஆய்வாளர் அஞ்சுகம் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செல்வராஜ், ஆனந்த நாயகி ஆகியோர் மேற்கொண்டனர்.