வில்லிபுத்தூர், ஜூன் 27: விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டராக சுகபுத்ரா நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று காலை வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். சுவாமி தரிசனம் செய்த கலெக்டர், கோயிலை சுற்றிப்பார்த்துவிட்டு புறப்பட்டு சென்றார்.