மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லத்மார் ஹோலி’ எனப்படும் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து விரட்டும் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.பர்சனாவில் உள்ள ராதை கோயில் அருகே நடைபெற்ற விழாவில் ராதை போன்று வேடமிட்டு பெண்கள் கையில் தடியுடனும், ஆண்கள் கையில் கேடயத்துடனும் திரண்டனர். பெண்கள் குச்சிகளால், ஆண்களை தாக்க, பெண்களின் தாக்குதல் தங்கள் மீது படாதவாறு ஆண்கள் தடுத்து பின்வாங்கினர்.பின்னர் மக்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசி, ஆடிப் பாடி மகிழ்ந்தனர். ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இந்த வித்தியாசமான திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மதுராவில் குவிந்துள்ளனர்.