விகேபுரம், ஜூலை 9: ஆணைமேல் அய்யனார் சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகத்தில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் தெற்கு வாகைகுளம் அழகியபாண்டிபுரத்தில் குளக்கரையில் அமைந்துள்ள ஆனைமேல் அய்யனார் சாஸ்தா கோயிலில் 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி சாஸ்தா ஹோமம் பூரணாகுதி ஹோமம் நடந்தது. இதைதொடர்ந்து தீபாராதனையில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாஸ்தாவை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.