மதுரை, ஜூலை 4: மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் மணிகண்டன்(45), மாட்டுத்தாவணி பேருந்து நிலைய ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோ ஸ்டாண்ட் முன்பாக நின்றிருந்தபோது ஒருவர் ஷேர் ஆட்டோவில் ஆட்களை ஏற்றியுள்ளார். இதனை மணிகண்டன் கண்டித்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டனை சரமாரியாக தாக்கிய அவர் தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.