குளச்சல், ஆக.31: திங்கள்நகர் அருகே திருவிதாங்கோடு புதுப்பள்ளித் தெருவை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம் (42). வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது மனைவி சபினா. இந்த தம்பதியினர் தற்போது குளச்சல் எம்ஜிஆர் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று செய்யது இப்ராகிம் தான் ஓட்டிவரும் ஆட்டோவை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் செய்யது இப்ராகிம் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. ஆட்டோ உரிமையாளர் வீட்டுக்கும் சென்றதாக தெரியவில்லை. இதனால் பதற்றமடைந்த சபினா, தனது கணவரை பல இடங்களில் தேடினார். ஆனால் செய்யது இப்ராகிம் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. எனவே இது குறித்து சபினா குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செய்யது இப்ராகிமை தேடி வருகின்றனர்.