ராமேஸ்வரம்,ஆக.23: ராமேஸ்வரத்தில் வெளியூர் பெர்மிட் ஆட்டோக்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் வெளியூர் பெர்மிட் ஆட்டோக்களை அப்புறப்படுத்த வேண்டும். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். டிக்கெட் போட்டு சவாரி ஏற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் என்.பி.செந்தில் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி, நிர்வாகிகள் கருணாமூர்த்தி, சுடலைக்காசி, ராமசந்திரபாபு, ஆட்டோ சங்கத் தலைவர்கள் மணிகண்டன், கோவிந்தன், தமிழ்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.