வேலூர், ஜூன் 18: வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் ஆட்டோ-கார் மோதி விபத்தில் சாலையில் மாங்காய்கள் சிதறியது. அரக்கோணத்தை சேர்ந்தவர் சங்கர்(28), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று ஆற்காட்டில் இருந்து வேலூர் மாங்காய் மண்டிக்கு மாங்காய்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். அதேபோல சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்றது. வேலூர் கிரீன் சர்க்கிள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது திடீரென எதிர்பாராத விதமாக காரும் ஆட்டோவும் மோதியதில் சரக்கு ஆட்டோவில் இருந்த மாங்காய்கள் சாலையில் சிதறின. மோதிய வேகத்தில் காரும் சென்டர் மீடியனில் மோதி நின்றது.இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் நின்று சாலையில் சிதறி கிடந்த மாங்காய்களை அப்புறப்படுத்தி சாலையோரம் குவித்தனர். மேலும், விபத்து குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோ டிரைவர் சங்கரும், காரில் வந்தவரும் லோசன காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து, போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோ-கார் மோதிய விபத்தில் சாலையில் சிதறிய மாங்காய்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில்
0