சேலம், ஜூன்.4: சேலம் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பால்ராஜ், எஸ்.ஐ. புவனேஸ்வரி மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 20 கிலோ குட்கா இருந்தது. ஆட்டோ டிரைவர் கந்தாஸ்ரமத்தை சேர்ந்த சண்முகம்(44), வண்டியில் இருந்த செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் தெருவை சேர்ந்த சுப்பிரமணி(52) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் சுப்பிரமணி, பெங்களூருக்கு சென்று அங்கிருந்து குட்காவை பஸ்சில் வாங்கி வந்து, சண்முகத்துடன் ஆட்டோவில் வைத்து ஆங்காங்கே விற்பனை செய்து வந்தது ெதரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோவில் வைத்து குட்கா விற்றவர் கைது
0
previous post