தர்மபுரி, ஆக.17: பாப்பாரப்பட்டி அருகே, எர்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி அனுப்பிரியா(31). இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அனுப்பிரியா எழுந்து சென்று பார்த்தபோது, டூவீலரில் 2 வாலிபர்கள் ஒரு ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், ஆட்டை திருடியது பாப்பிரெட்டிப்பட்டி குப்பக்கரையைச் சேர்ந்த அய்யந்துரை(23), கார்த்தி(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவீலர் மற்றும் ஆடு கைப்பற்றப்பட்டது.
ஆடு திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது
previous post