கெங்கவல்லி, ஆக.3: கெங்கவல்லி அருகே, தெடாவூர் பேரூராட்சி திருச்சி மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் விவசாயி துரை(51). இவரது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார். நேற்று அதிகாலை ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு துரை எழுந்து பார்த்தபோது, ஆட்டை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டு டூவீலரில் செல்ல முயன்றது தெரிந்தது. பின்னர் அவர் சத்தம் போட்டு, பொதுமக்கள் உதவியுடன், அவரை மடக்கி பிடித்தார். இது குறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், கடம்பூர் பகுதியை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன்(25) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
ஆடு திருடிய வாலிபர் கைது
previous post