ராசிபுரம், நவ.20: வெண்ணந்தூரில் ஆடு திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் அடுத்துள்ள பழந்தின்னிப்பட்டி பகுதியில் ஆடுகள் அடிக்கடி திருடு போவதாக வெண்ணந்தூர் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று வாகன சோதனையின்போது, 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, விசாரித்ததில் வெண்ணந்தூர் பகுதியில் ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்கள். விசாரணையில் அவர்கள் வெண்ணந்தூர், தங்கசாலை வீதி அருந்ததியர் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் தமிழரசன்(23) மற்றும் பட்டணம் அருகே உள்ள அய்யம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த பழனிவேல் மகன் மனோஜ் பாரத்(35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆடு திருடிய இருவர் கைது
0