தர்மபுரி: அதியமான்கோட்டை அருகே ஆடு, கோழிகளை திருடிய மாணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை கோடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர், ஆடு-கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த 28ம் தேதி மாலை, வழக்கம் போல் ஆடு, கோழிகளை வீட்டின் அருகேயுள்ள பட்டியில் அடைத்தார். நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் சத்தம் போட்டது. இதனால், சந்தேகமடைந்த கிருஷ்ணன் பட்டிக்கு விரைந்தார். அப்போது, ஒரு ஆடு மற்றும் 2 கோழிகளை ஒரே டூவீலரில் 3 பேர் திருடிச்செல்வதை கண்டு திடுக்கிட்டார். உடனே, அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால், 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டனர்.