காரிமங்கலம், நவ.20: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 450 மாடுகள், 350 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ₹25 லட்சத்திற்கு மாடுகளும், ₹20 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி 3 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது. சபரி மலை சீசன் தொடங்கியதால் கால்நடை விற்பனை மந்தமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடுகள் விற்பனை மந்தம்
0
previous post