கே.வி.குப்பம், நவ.26: கே.வி.குப்பம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்து. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. இந்த சந்தைக்கு காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் ஆடுகளை வாங்கவும் விற்கவும் ஏராளமானோர் வருகின்றனர். அதன்படி நேற்று காலை வழக்கம்போல் ஆட்டுச்சந்தை கூடியது. ஆடுகளை வளர்ப்போர் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர். கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் விலை அதிகமாக இருந்ததால் விற்பனை எதிர்பார்த்த வகையில் இல்லை. மிகவும் மந்தமாக இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடுகள் விற்பனை மந்தம் கே.வி.குப்பம் வாரச்சந்தையில்
0