தேவதானப்பட்டி, ஆக.22: தேவதானப்பட்டி அருகே சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை கிராமம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (77). இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் பின்புறம் தனியாருக்கு சொந்தமான தோப்பில் கிடை போட்டுள்ளார். இந்நிலையில், இதில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 ஆடுகள் மற்றும் 5 குட்டிகள் காணாமல் போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஆடுகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.