இடைப்பாடி, ஆக.13: இடைப்பாடி அருகே, கொங்கணாபுரம் தானகுட்டிவளவு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி, விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். தினந்ேதாறும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு, பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று முன்தினம், நள்ளிரவில் பட்டியில் இருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு, தமிழரசி வந்து பார்த்தபோது 2 பேர், ஆடுகளை திருட வந்தது தெரிய வந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன், தமிழரசி 2 இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து, கொங்கணாபுரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், இளம்பிள்ளை தப்பகுட்டையை சேர்ந்த தங்கவேல் மகன் சதீஷ்குமார்(27), அவரது நண்பர் மோகன்(24) என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. மேலும், நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை திருடி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர்.