ராமநாதபுரம், ஆக.27:ராமநாதபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடுகள் தொடர்ச்சியாக மாயமாகி வந்தது. இதுகுறித்து ஆடு வளர்ப்போர் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.தொடர்ந்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகள் காணாமல் போன பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்தனர்.அதில் ஒரு சொகுசு காரில் வரும் கும்பல் ஒன்று ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
அந்த காரின் பதிவு எண்ணை வைத்து காவல்துறையினர் ஆடுகள் திருடும் மர்மக் கும்பலை தேடி வந்தனர்.அதன்படி நேற்று முன்தினம் காரைக்குடியை சேர்ந்த ஆறுமுகம் (56), அராபாத் (28) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 8 வெள்ளாடுகள் மற்றும் ஆடுகள் விற்றதில் கிடைத்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஆடு திருடப் பயன்படுத்திய கரையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.