தொண்டி, ஆக.8: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோப்பு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த 30 தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று மாலை கோயிலிலிருந்து புறப்பட்ட பாரி ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலையில் பாவோடி மைதானம் வழியாக சென்று கடற்கரையை அடைந்தது. அனைத்து பாரியையும் கடலில் கரைத்தனர். பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.