Saturday, February 24, 2024
Home » ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம்

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம்

by Karthik Yash

சேலம், டிச.28: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 12ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. கடந்த 22ம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடந்தது. 23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அன்று மூலவர் பெருமாள், தாயார், ஆண்டாள், கருடாழ்வார், ஆஞ்சநேயக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நடந்தது. 23ம் தேதி இராப்பத்து நிகழ்ச்சி தொடங்கியது. ஜனவரி 3ம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடக்கிறது. இவ்விழாவையொட்டி நேற்று காலை ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி ஆழ்வார் மோட்சம், 2ம் தேதி சொர்க்கவாசல் திருக்காப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

12 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi