சீர்காழி,ஆக.24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட சிவலோக தியாகராஜா சுவாமி கோயிலில் வருகிற 23ம் தேதி கும்பாபிஷேகம் தருமபுர ஆதீனம் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக பணிக்காக தருமபுர ஆதீனம், தருமபுர ஆதீன மடத்திலிருந்து பாதயாத்திரையாக சென்று ஆச்சாள்புரத்தில் தங்கி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமியை சீர்காழி தமிழ்ச் சங்கத் தலைவர் மார்கோனி தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அன்னதான திட்டத்திற்கு ரூ.10 லட்சமும், வஸ்திர தானத்திற்கு ரூ.3 லட்சமும் என ரூ.13 லட்சம் தனது சொந்த நிதியை நன்கொடையாக வழங்கினார். தருமபுர ஆதீனம் தமிழ் சங்க தலைவர் மார்கோனி குடும்பத்திற்கு ஆசிர்வாதம் அளித்தார்.