செய்யாறு, ஜூன் 4: செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்ைதச் சேர்ந்தவர் ராமநாதன். தனியார் கம்பெனியில் வேலை செய்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி அருள்விழிச்செல்வி(60), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்கள் இருவரும் கடந்த 28ம்தேதி பெங்களூருவில் உள்ள மகளை பார்க்க வீட்டை பூட்டிக்கொண்டு சென்றனர். கடந்த 1ம் தேதி மதியம் பக்கத்து வீட்டுக்காரரான சந்திரன் மனைவி பரிமளா, ஆசிரியையின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டார்.
உடனே ஆசிரியைக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை மற்றும் அவரது கணவர் பெங்களூரில் இருந்து நேற்றுமுன்தினம் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளியால் ஆன காமாட்சியம்மன், குத்துவிளக்குகள், வெள்ளி காமதேனுசிலை உள்பட அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அருள்விழிச்செல்வி செய்யாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ நிர்மல்குமார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியை வீட்டில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
ஆசிரியை வீட்டில் வெள்ளி திருட்டு செய்யாறு அருகே ஓய்வு பெற்ற
0