காஞ்சிபுரம், செப்.6: காஞ்சிபுரம் மாவட்டம், ஊவேரிசத்திரம் பிடிலீ செங்கல்வராய நாயக்கர் கல்லூரியின் ஐடிஐ வளாகத்தில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பொன்.கலையரசன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அரிஸ்டாட்டில், இயக்குநர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், ஐடிஐ ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி, பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கவுரவித்தனர். ஐடிஐ முதல்வர் சத்யராஜ் நன்றி தெரிவித்தார். நிகழ்வில் பொறியியல் கல்லூரி பேராசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.