திருமங்கலம், செப். 6: கள்ளிக்குடி தூய இருதய மழலையர் துவக்கப்பள்ளியில், ஆசிரியர் தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அருட்தந்தை பெரியசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பாஸ்டர் புஷ்பராஜ், திருமங்கலம் நிர்மலா பள்ளி தாளாளர் அருட்தந்தை அந்தோணிராஜ், செம்பட்டி பங்குத்தந்தை செபாஸ்டியன், பள்ளி செயலாளர் அருள் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. காமராஜர் பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி0களுக்கும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் காளீஸ்வரி நன்றி தெரிவித்தார்.