பட்டுக்கோட்டை, செப். 6: பட்டுக்கோட்டை அடுத்த சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, பிருந்தாவன் சி.பி.எஸ்.இ. பள்ளி, பிருந்தாவன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளின் ஆசிரியர்கள் 186 பேருக்கும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து, தங்களின் ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பிருந்தாவன் 3 பள்ளிகளின் ஆசிரியர்கள் 186 பேரையும் கௌரவித்ததுடன், அவர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கினர்.
ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மோகன் தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் டாக்டர் கண்ணன், பொருளாளர் ரெத்தினக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளியின் இயக்குனர்கள் டாக்டர்கள் ராமகிருஷ்ணன், கௌசல்யாராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், ராமையா, ராஜமாணிக்கம், சுவாமிநாதன், டாக்டர் பிரசன்னாகூத்தபெருமாள் மற்றும் பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமதுஅக்பர்அலி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் குமாரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கௌசல்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.