கோபால்பட்டி, செப். 6: கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப பள்ளியில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தனராஜன் தலைமை வகித்தார். விழாவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தங்கசுமதி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தங்கவேல் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் பிரதாப் சிங், வீரபாண்டி ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பள்ளியின் பாதுகாப்பிற்காக முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதற்கான பணி துவங்கப்பட்டது. வட்டார வள மைய ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள், இன்னாள்- முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.