அஞ்சுகிராமம், செப்.7: மயிலாடி எஸ்.எம்.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் நிர்வாக உறுப்பினர் ஆனந்த் கலந்து கொண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் திருவிளக்கில் தீபம் ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் சுவாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.