அரூர்.செப்.6: கம்பைநல்லூர் ராம் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் தலைமையேற்று,ஆசிரியர்களுக்கு இனிப்பு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி, ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தனர். விழாவையொட்டி ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஸ்வரி, மணிமேகலை மற்றும் பிரவீணா ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
previous post