நெல்லை ஜன. 22: நெல்லை மாநகராட்சி 51வது வார்டுக்கு உட்பட்ட ஆசிரியர் காலனியில் ரூ.70 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே ஆர் ராஜு, மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை சாகுல், 51வது வார்டு கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி, ஆசிரியர் குடியிருப்பு நலச்சங்க தலைவர் மீரான், செயலாளர் ஹெரால்ட் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், திமுக பிரமுகர் துரையரசன், ரகுமான் ஷா, திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசி மணி, ஷேக் பிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் காலனியில் சாலை பணி
0