போடி, ஜூன் 7: போடி சுப்புராஜ் நகர் புது காலனி சந்தனமாரியம்மன் கோயில் 2வது தெருவை சேர்ந்தவர். முனியம்மாள் (65). இந்நிலையில் முனியம்மாள் கடந்த 3ம் தேதி வீட்டில் பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள், அவரது உறவினர் செல்வம் மனைவி சுமதி (40) என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.சுமதி முனியம்மாளை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது முனியம்மாளிடம் விசாரிக்கையில் மன உளைச்சலில் இருந்ததால் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் நகர் காவல் நிலைய எஸ்.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆசிட் குடித்த மூதாட்டி சாவு
0