சிவகங்கை, ஆக. 19: தமிழக அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் ஊராட்சி செயலர்களை சேர்க்க வலியுறுத்தி வருகின்ற 21ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஊராட்சி செயலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாக்கியராஜ் கூறியதாவது:
தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வலியுறுத்தி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21ம் தேதி மாவட்ட முழுமைக்கு ஊராட்சி செயலாளர்கள் சுமார் 350 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போராட்டத்துக்குப் பிறகும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் அடுத்த கட்டமாக செப்.27ல் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு மாநில அளவில் பெருத்திரள் முறையீடு இயக்கம் நடத்தபட உள்ளது என தெரிவித்துள்ளார்.