சேலம்: சேலம் 3 ரோட்டில் உள்ள வள்ளி எலும்பியல் மற்றும் விளையாட்டுத்துறை மருத்துவமனையின் சார்பில் நடைபெற்ற ‘ஆக்டிவ் சேலம் 2.0 வாக்கத்தான்’ நிகழ்ச்சியில் 1300 பேர் பங்கேற்றனர். சேலம் 3 ரோட்டில் உள்ள வள்ளி எலும்பியல் மற்றும் விளையாட்டுத்துறை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை சார்பில் ‘ஆக்டிவ் சேலம் 2.0 வாக்கத்தான்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையின் டாக்டர்கள் நடனசபாபதி, விஜயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்து வாக்கத்தானை தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடகா மாநில நில அபகரிப்பு துணை கமிஷனர் சக்திவேல், பிஎன்ஐ சேலம் மண்டல செயல் இயக்குனர் கோபிநாத் ராமமூர்த்தி, ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.