புதுடெல்லி: டெல்லியில் ஆக்சிஜன் நிரம்பிய சிலிண்டருக்கு பதிலாக தீயணைப்புக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் கருவியை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் கொரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் காத்திருக்கும் நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் நிரப்பபட்ட சிலிண்டர்கள் என கூறி தீயணைப்புக் கருவிகளாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை சிலர் நேற்று விற்றுள்ளனர். ஒரு கருவியை ரூ.10 ஆயிரத்துக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து கீதா அரோரா என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்த அஸுதோஷ் சவுஹான் (19), ஆயுஷ் குமார் (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரெம்டெசிவர் மருந்தை போலியாக விற்ற மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்….