வேலூர், ஜூன் 20: வேலூர் பில்டர்பெட் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். வேலூர் பில்டர்பெட் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு, பாதசாரிகள் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. மேலும் தற்போது மல்டிஸ்பாஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட உள்ளதால், மக்கள் வந்து செல்வது வழக்கத்தை பல மடங்கு அதிகரிக்கும் எனவே, மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. 2வது மண்டல கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து பில்டர் ெபட்ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வேலூர் பில்டர்பெட் ரோட்டில்
0