ஈரோடு, ஜூலை 9: ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தார் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, பெருந்தலையூர், செரையாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று அளித்துள்ள மனு விவரம்: முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், பெருந்தலையூர், பவானி சாலையில் இருந்து கரை எல்லப்பாளையம் சாலை வரை தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
செரையாம்பாளையம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அப்படியே தார் சாலை அமைக்கப்படுகிறது. இதனால், தார்சாலையை முறையாகவும், தரமாகவும் அமைக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட பகுதியில் வாகனங்கள், பொதுமக்கள் செல்லும்போது சிரமம் ஏற்படும். எனவே, அந்த இடங்களை அதிகாரிகள்முழுமையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புக்களை அகற்றிவிட்டு, தரமாக தார் சாலையை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.