கோவை, செப்.2: கோவை வாலாங்குளம் மற்றும் பெரியகுளம் ஆகாய தாமரைகள் மூடி அசுத்தமாக காணப்பட்டது. துர்நாற்றம் வீசியதால் ஸ்மார்ட் சிட்டி பூங்கா செல்லும் மக்கள் தவிப்படைந்தனர். இதை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களாக ஜேசிபி மூலமாக ஆகாய தாமரைகளை அகற்றி வந்தனர். பெரிய குளம் முழுவதிலும் இருந்த ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டது. வாலாங்குளத்திலும் ஆகாய தாமரைகள் முற்றிலும் அகற்றப்பட்டது. குறிப்பாக படகு துறை பகுதியில் இருந்த அனைத்து ஆகாய தாமரைகளும் அகற்றப்பட்டு பளிச்சென மாறியது.
இதனால் இந்த பகுதியில் அழகாக மாறிவிட்டது. ஆகாய தாமரைகளை அகற்றி கரைப்பகுதியில் குவித்து வைத்துள்ளனர். இவை அழுகி நாறிப்போனதால் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை விரைவாக அகற்றி எடுக்க வேண்டும். மேலும் ஆகாய தாமரைகள் பராமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்கடம் வாலாங்குளத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கழிவு நீர் சுத்தம் செய்து குளத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.