பெரம்பலூர்,செப்.16: முழுமுதற்கடவுளாக நாம் வணங்கும் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை நம் அனைவருக்கும் பிடித்ததே. அந்த கொழுக்கட்டை ஆண்டு முழுவதும் கிடைக்குமிடம் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம். அஸ்வின்ஸ் நிறுவனத்தில் தனது அனைத்து கிளைகளிலும், விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை விற்பனையை இப்பொழுது துவங்கியுள்ளது.
பெரம்பலூரை தலைமையிடாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஸ்வீட், ஸ்நாக்ஸ், பேக்கரி மற்றும் வெஜ்ரெஸ்டாரண்ட்ஸ் சென்னை, திருச்சி, பெரம்பலூர், சேலம், ஆத்தூர், துறையூர், அரியலூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், முசிறி, கிருஷ்ணகிரி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் கொழுக்கட்டை வைத்து வழிபடும் வகையில் சிறந்த பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதன்படி தேங்காய் பூரணம், எள்ளு பூரணம், அம்மணி, காரம், மோதகம் மற்றும் பால் கொழுக்கட்டை ஆகிய 5 வகையான கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த கொழுக்கட்டைகள் மிக்சிங் கொழுக்கட்டைகளாகவும், அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவிலும் விற்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அஸ்வின்ஸ் ஸ்பெஷல் கொழுக்கட்டையுடன் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர். கே.ஆர்வி கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.